1. Home
  2. தமிழ்நாடு

மன்னிப்பு கடிதம் வழங்கி நேரில் மன்னிப்பு கோரினார் இர்பான்..!

1

பிரபல யூடியூபரான இர்ஃபான் கடந்த  19-ம் தேதி தனது யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டு அதில் தனக்கு பிறக்க போகும் குழந்தையின் பாலினத்தை அனைவருக்கும் அறிவித்தார். இந்தியாவில் கருவில் இருக்கும் பாலினத்தை அறிவிப்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இர்ஃபான் தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை வெளிப்படையாக அறிவித்தது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

இதையடுத்து, யூடியூப் சேனலில் இருந்து வீடியோவை இர்ஃபான் நீக்கினார். கடந்த 21-ம் தேதி மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் (டிஎம்எஸ்), பாலினத் தேர்வை தடை செய்தல் சட்ட விதிகளை மீறியதற்காக இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

இந்நிலையில், மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குனர் இர்ஃபானுக்கு நோட்டீஸ் வழங்கிய நிலையில் இர்ஃபான் நேரில் சென்று இயக்குனரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனரை நேரில் சந்தித்து தான் செய்த தவறுக்கு கடிதம் எழுதி மன்னிப்பு கோரினார் யூடியூபர் இர்ஃபான்.

இர்ஃபானின் மன்னிப்பு கடிதத்தை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்ட நிலையில் , இர்ஃபான் சிசுக்கலைப்பு குறித்து விழிப்புணர்வு காணொளியை வெளியிட வேண்டுமென நிபந்தனை தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் சிசுக்கலைப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் வீடியோ வெளியிடுவதாகவும் இர்ஃபான் உறுதி அளித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like