4வது முறையாக இன்றும் IRCTC தளம் முடங்கியது..!
டிக்கெட் ரேட் குறைவு, பஸ்களை காட்டிலும் பாதுகாப்பானது, விரிவான நெட்வொர்க் உள்ளிட்ட காரணங்களால் பலரும் ரயிலில் பணிக்கவே விரும்புகிறார்கள்.
ரயில் பயணங்கள் அதிகரித்து இருக்கும் போதிலும், ரயில் டிக்கெட்களை புக் செய்வது சமீப காலமாகக் கஷ்டமான ஒன்றாக மாறி வருகிறது. ரயில் டிக்கெட்களை புக் செய்யப் பயன்படும் ஐஆர்சிடிசி தளம் முக்கிய நேரங்களில் முடங்குவது வாடிக்கையாக மாறியிருக்கிறது.
இந்நிலையில் இன்று காலை திடீரென ஐஆர்சிடிசி செயலி மற்றும் இணையதளம் என இரண்டும் முடங்கிவிட்டது.
4ஆவது முறையாக இன்றும் IRCTC தளம் முடங்கியுள்ளது. இதனால் ரயில் டிக்கெட் முன்பதிவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
முக்கிய விடுமுறை நாட்களில் அதிகளவிலான மக்கள் தட்கலில் புக் செய்ய முயலும் நிலையில், இதுபோல தொடர்ந்து முடங்குவது பயணிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.