IRCTC வழங்கும் சூப்பர் பேக்கேஜ்...! சென்னை டூ காசி - கயா - அயோத்தி..!
IRCTC ஆன்மிக சுற்றுலா செல்லும் பயணிகளுக்கான சிறந்த பேக்கேஜை வழங்குகிறது. சென்னையில் இருந்து, காசி, கயா, அயோத்தி, பிரயாக்ராஜ், திருவேணி சங்கமம் செல்ல திட்டமிட விரும்பினால், ஐஆர்சிடிசியின் பேக்கேஜ் மூலம் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய இப்போதே முன்பதிவு செய்யலாம். CHENNAI-GAYA-VARANASI-ALLAHABAD-AYODHYA- CHENNAI-AMAVASAI SPECIAL (SMA38) என்ற பேக்கேஜ் மூலம், காசி, கயா, அயோத்தி, பிரயாக்ராஜ் உள்ளிட்ட இடங்களுக்கு குறைந்த செலவில் பயணம் செய்யலாம்.
சென்னை – கயா – வாரணாசி – பரயாக்ராஜ் – அயோத்தி – சென்னை (05 இரவுகள் / 06 பகல்கள்) பேக்கேஜிற்கான கட்டணம்
பேக்கேஜிற்கான கட்டணத்தில் விமான டிக்கெட், தங்கும் வசதி, உணவு, உள்ளூரில் சுற்றி பார்க்க பஸ் வசதி, டூரிஸ் கெய்ட் உள்ளிட்ட பல சேவைகள் கிடைக்கும். சென்னையில் இருந்து விமானம் மூலம் லக்னோ, பின்னர் அங்கிருந்து காசி, அயோத்தி, பிரயாக்ராஜ், கயா, உள்ளிட்ட இடங்களுக்கு பஸ்ஸில் பயணம். பின்னர் பாட்னாவில் இருந்து சென்னை விமானம் மூலம் திரும்பும் 05 இரவுகள் / 06 பகல்கள் காலத்திற்கான IRCTC பேக்கேஜில் ஒரு நபருக்கான கட்டணம் ஒரு நபருக்கு ரூ.51,500/-, அதே சமயம் இருவராக செல்ல திட்டமிட்டால், ஒருவருக்கு ரூ.36,500 மட்டுமே, மூன்று பேராக செல்ல ஒருவருக்கு ரூ.36,000 மட்டுமே செலுத்த வேண்டும். குழந்தைகளுக்கான கட்டணமும் குறைவு தான். மேலும் விபரங்களை ஐஆர்சிடிசி தளத்தில் காணலாம்.
பயணிகளுக்குத் தினமும் காலை மற்றும் இரவு உணவுகள், உள்ளூரில் சுற்றிப் பார்ப்பதற்கான போக்குவரத்து வசதி மற்றும் தங்குமிடம் என அனைத்தும் ஏற்பாடுகளும் செய்து தரப்படும்.
பேக்கேஜில் அடங்குபவை
சென்னை - லக்னோ & பாட்னா-சென்னை - எகானமி வகுப்பில் இரு வழி விமான கட்டணம்
ஸ்டாண்டர்ட் ஹோட்டல்களில் தங்குமிடம்
ஏசி தனியார் பஸ்ஸில் சுற்றுலா பயணம்
05 காலை உணவு & 05 இரவு உணவுகள்
IRCTC சுற்றுலா மேலாளரின் சேவைகள்
ஜிஎஸ்டி வரி
பேக்கேஜில் அடங்காதவை
சுற்றுலாவில் மதிய உணவுகளுக்கான கட்டணங்கள் சுற்றுலா பயணி ஏற்க வேண்டும். கோயில், நினைவுச்சின்னங்கள், படகு சவாரி, தரிசன டிக்கெட்டுகள் போன்றவற்றுக்கான அனைத்து நுழைவுக் கட்டணங்களும் இதில் அடங்காது. ஹோட்டல்களில் ஏதேனும் போக்குவரத்து கட்டணம், டிப்ஸ், மினரல் வாட்டர், தொலைபேசி கட்டணங்கள், சலவை மற்றும் அனைத்து தனிப்பட்ட இயல்புடைய பொருட்கள்.