வெறும் 51,500 ரூபாயில் சென்னை டூ அந்தமான் போகலாம் : ஐஆர்சிடிசி ஏற்பாடு
ஐ.ஆர்.சி.டி.சி எனப்படும் இந்திய ரயில்வேயின் சுற்றுலா பிரிவு பல விமான சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் சென்னையில் இருந்து அந்தமானுக்கு சிறப்பு சுற்றுலா திட்டமிடப்பட்டுள்ளது.அந்த வகையில், சென்னையில் இருந்து அந்தமானுக்கு சிறப்பு விமான சுற்றுலாவுக்கு ஐஆர்சிடிசி ஏற்பாடு செய்துள்ளது. சென்னையில் இருந்து வரும் 23 ம் தேதி சிறப்பு விமானம் புறப்படவுள்ளது.
அந்தமானில் உள்ள ஹேவ்லாக், நீல், போர்ட் பிளேர் ஆகிய இடங்களை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆறு நாட்கள் கொண்ட இந்த விமான சுற்றுலாவுக்கு ஒருவருக்கு ரூ. 51,500 கட்டணமாகும். விமான கட்டணம், தங்கும் வசதி, கப்பல் பயண கட்டணம், பயண காப்பீடு உள்ளிட்டவை இதில் அடங்கும். இது குறித்து மேலும் தகவல்களை பெற 8287931974, 8287931977, 8287932070 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.