1. Home
  2. தமிழ்நாடு

ஒற்றை பில்லால் உலகை அதிரவைத்த ஈராக்..! இனி பெண்களின் திருமண வயது 9..?

1

ஈராக்கில் ஆண்களின் திருமண வயது 15, பெண்களின் திருமண வயது 9 என குறைக்கும் வகையில் மசோதா ஒன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. குறிப்பாக மனித உரிமை ஆர்வலர்கள், மகளிர் ஆணையங்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. புதிய சட்டத்திற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.

இளம் பெண்களின் கல்வி, சுகாதாரம், ஒட்டுமொத்த வாழ்க்கை சூழல் என அனைத்துமே பாதிக்கப்படும் என்று எச்சரிக்கின்றனர். பள்ளி செல்வதை தடுத்து விடும். இளம் வயதிலேயே கர்ப்பம் அடைந்து விடுவர். குடும்ப வன்முறையில் அதிகம் சிக்கி கொள்ளும் நிலை ஏற்படும் எனக் கூறியுள்ளனர். ஈராக்கில் தற்போது திருமண வயது 18ஆக இருக்கிறது. இருப்பினும் 18 வயது பூர்த்தி அடைவதற்கு முன்பே 28 சதவீத பெண்கள் திருமணம் செய்து கொள்வதாக யுனிசெப் நிறுவனம் அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளது.

ஈராக் நீதித்துறை அமைச்சகம் பரிந்துரையின் படி, புதிய சட்டமானது மத ரீதியிலான விதிமுறைகள், இல்லையெனில் சிவில் நீதிமன்ற அமைப்பின் விதிமுறைகள் என இரண்டில் ஒன்றை தேர்வு செய்து பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் புதிய சட்டத்தால் குழந்தை திருமணங்கள் அதிகம் நடக்கும். பெண் குழந்தைகள் பெரிதும் பாதிப்பிற்கு ஆளாக்கப்படுவர். மனித உரிமை ஆர்வலர்களின் பார்வையில், புதிய சட்டமானது ஈராக் நாட்டை நூற்றாண்டுகள் பின்னுக்கு தள்ளிவிடும்.

பெண்களின் திருமண வயதை மதவாதிகள் தீர்மானித்தால் பெரிய சிக்கல் தான் வரும். ஆண் - பெண் சமத்துவ நிலை பாதிக்கப்படும். பெண்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாகி விடும் என்கின்றனர். அதேசமயம் இந்த மசோதாவை ஆதரிப்பவர்கள் கூறுகையில், இஸ்லாமிய சட்டங்கள் இளம் பெண்களை தவறான உறவில் இருந்து காக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல் தான் புதிய சட்டமும் இருக்கும் எனக் குறிப்பிடுகின்றனர்.

Trending News

Latest News

You May Like