1. Home
  2. தமிழ்நாடு

ஈரானில் இடைக்கால அதிபராகும் துணை ஜனாதிபதி முகமது மோக்பர்..?

1

ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஹூசைன் அமீர் அப்துல்லாஹியன், அதிகாரிகள், பாதுகாவலர்கள் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவம் ஈரான் உள்ளிட்ட வட மேற்கு நாடுகள் மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், 63 வயதான அதிபர் ரைசி மறைவைத் தொடர்ந்து ஈரான் பெரும் துயரத்தில் மூழ்கியுள்ள நிலையில் அந்நாட்டின் முதல் துணை குடியரசுத் தலைவர் முகமது மொக்பர் (69), இடைக்கால அதிபர் பதவியை ஏற்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும், முகமது மோக்பர், மக்களவை சபாநாயகர் முகமது பாக்கர் கலிபாஃப், நீதித்துறை தலைவர் கோலம்ஹோசைன் மொஹ்செனி எஜே ஆகியோர் அடங்கிய ஒரு கவுன்சில் 50 நாட்களுக்குள் புதிய அதிபர் தேர்தலை ஏற்பாடு செய்யும் பணியில் உள்ளனர்.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, ஹெலிகாப்டர் விபத்தில் திடீரென உயிரிழந்த சம்பவத்தை, இஸ்ரேலுடனான மோதலை தொடர்பு படுத்தி, அவரது இறப்பில் இஸ்ரேலுக்கு தொடர்பு இருக்கக்கூடும் என ஈரானில் சில தகவல்கள் உலாவி வருவது குறிப்பிடத்தக்கது 

Trending News

Latest News

You May Like