1. Home
  2. தமிழ்நாடு

ஈரான் துணை அதிபர் திடீர் ராஜினாமா..! 11 நாட்களே பதவியில் இருந்தார்..!

1

ஈரானில் கடந்த மே மாதம் அதிபர் இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். பின்னர் அங்கு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வென்று மசூத் பெசெஷ்கியான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியான முகமது ஜாவத் ஜரீப் (வயது 64) நாட்டின் மூலோபாய விவகாரங்களுக்கான துணை அதிபராகக் கடந்த 2-ந்தேதி நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில் நாட்டின் புதிய அமைச்சரவை பட்டியலை அதிபர் மசூத் பெசெஷ்கியான் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) முன்மொழிந்தார். இதில் ஒரு பெண் உள்பட 19 எம்.பி.க்கள் இருந்தனர். இந்தப் பட்டியல் முன்மொழியப்பட்ட சில மணி நேரங்களில் துணை அதிபர் முகமது ஜாவத் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

தான் முன்மொழிந்த 19 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவை அமைப்பதில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர் பதவியை ராஜினாமா செய்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. துணை அதிபர் ராஜினாமா செய்தது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. துணைஅதிபரின் ராஜினமா முடிவு ஈரான் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending News

Latest News

You May Like