1. Home
  2. தமிழ்நாடு

ஈரானுக்கு 2 வாய்ப்புகளே உள்ளன. ஒன்று அமைதி, அல்லது பெருந்துயரம் - டிரம்ப் எச்சரிக்கை..!

Q

ஈரான் நாட்டின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க போர் விமானங்கள் வெற்றிகரமாக குண்டு வீசி தாக்குதல் நடத்தின என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரான் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக நாட்டு மக்களுக்கு, அதிபர் டிரம்ப் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: ஈரானுக்கு இரண்டு வாய்ப்புகளே உள்ளன. ஒன்று அமைதி, அல்லது பெருந்துயரம்.
ஈரான் மீதான தாக்குதலில் வெற்றி அடைந்துள்ளோம். ஈரான் அடிபணியாவிட்டால் தாக்குதல் மோசமாகும். போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் சம்மதிக்க வேண்டும். இந்த நிலை தொடரக்கூடாது. அமைதி நிலவ வேண்டும். ஈரான் மீதான இந்த தாக்குதல் ஒரு அற்புதமான ராணுவ வெற்றி. ஈரான் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் முன்னணி நாடு. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உடன் இணைந்து இந்த தாக்குதல் நடத்தியுள்ளோம்.
ஈரானின் முக்கிய அணு ஆயுத நிலையங்களை தாக்கி உள்ளோம். ஈரானில் இன்னும் பல இடங்களை குறி வைத்துள்ளோம். இன்று நாங்கள் செய்ததை உலகின் எந்த ராணுவத்தினாலும் செய்ய முடியாது. ராணுவத்தினருக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
ஈரான் நடத்திய தாக்குதலில் அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்க வான்வெளிப்படை தாக்குதல் நடத்தியுள்ளது. 40 ஆண்டுகளாக அமெரிக்கா, இஸ்ரேலை குறி வைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் மீதான போரை ஈரான் முடிவுக்கு கொண்டு வராவிட்டால் அமெரிக்காவின் தாக்குதல் தொடரும். ஈரானில் அணு ஆயுத அச்சுறுத்தல்களை முடிவுக்கு கொண்டு வருவது எங்கள் இலக்கு. ஈரான் அமைதியான நிலைக்கு திரும்பாவிட்டால் அடுத்தடுத்த தாக்குதல்கள் மோசமாக இருக்கும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்

Trending News

Latest News

You May Like