மனைவியை தாக்கிய ஐபிஎஸ் அதிகாரி.. மனநலம் பாதிப்பு என கூறும் மகள்.. வீடியோவால் வழக்கில் திருப்பம் !

மத்திய பிரதேசம் தலைநகர் போபாலை சேர்ந்தவர் ஐபிஎஸ் அதிகாரி புருஷோத்தம் ஷர்மா. இவர் தனது மனைவியை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தும் வீடியோ அண்மையில் சமூகவலைதளங்களில் பரவியது.
இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்தது. மேலும் அந்த வீடியோ அடிப்படையில் சிறப்பு டிஐஜி பதவியிலிருந்து புருஷோத்தம் ஷர்மா உடனே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சூழலில் தனது தாயார் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அவரது மகள் கூறியுள்ளார். அதாவது தனது தந்தையான சிறப்பு டிஐஜி இடைநீக்கம் செய்யப்பட்ட அடுத்த சிறிது நேரத்திலேயே அப்பெண் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். இதேபோல் தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளராக பணிபுரியும் இளம்பெண் ஒருவரும் ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி மீது புகார் கூறியுள்ளார்.
அவர் அளித்த புகாரில், கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி, ஐபிஎஸ் அதிகாரி புருஷோத்தம் ஷர்மா அவருடைய வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு பகுதிக்கு தேநீர் அருந்த அழைத்தார். சிறிது நேரம் கழித்து, அதிகாரியின் மனைவி அவரது வீட்டிற்கு வந்து தகாத வார்த்தைகளால் திட்டி சண்டை போட்டார்.
இதனால் கோபமடைந்த புருஷோத்தம் அங்கிருந்து சென்றுவிட்டார். பிறகு பல அநாவசியமான கேள்விகளைக் கேட்டதுடன், படுக்கையறைக்குச் சென்று அதை வீடியோ எடுத்து அவருடைய மகனிடம் கொடுத்து சமூக ஊடங்களில் பதிவிட்டதாகவும் அந்த தொகுப்பாளர் புகாரில் கூறியிருக்கிறார்.
மேலும் அந்த வீடியோவில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை வைத்ததாகவும் அந்தத் தொகுப்பாளர் குறிப்பிட்டிருக்கிறார். இவ்வாறு அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி வருவதால் இந்த வழக்கில் பல திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. எனினும் இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
वीडियो मप्र के स्पेशल डीजी का बताया जा रहा है, आपसे झगड़े के बाद अपनी पत्नी पर बहादुरी दिखा रहे हैं ! @NCWIndia @sharmarekha @Manekagandhibjp @NPDay @PoliceWaliPblic @ndtvindia @rohini_sgh @drnarottammisra @DGP_MP @ChouhanShivraj pic.twitter.com/9FpXpiZn3l
— Anurag Dwary (@Anurag_Dwary) September 28, 2020
newstm.in