1. Home
  2. தமிழ்நாடு

மனைவியை தாக்கிய ஐ.பி.எஸ். அதிகாரி சஸ்பெண்டு.. வீடியோ வெளியானதால் மத்திய அரசு அதிரடி !

மனைவியை தாக்கிய ஐ.பி.எஸ். அதிகாரி சஸ்பெண்டு.. வீடியோ வெளியானதால் மத்திய அரசு அதிரடி !


மனைவியை தாக்கிய ஐ.பி.எஸ். அதிகாரியை பணியிடை நீக்கம் செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியாக புருஷோத்தம் சர்மா உள்ளார். இவர் அங்கு சிறப்பு டி.ஜி.பி. பதவி வகித்து வந்துள்ளார். கடந்த மாதம் புருஷோத்தம் சர்மா தனது மனைவியை சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சி ஒன்று இணையதளத்தில் பரவி வைரலானது.

இது தொடர்பான வீடியோ ஊடங்களிலும் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியது. உயர் பதவியில் இருந்தாலும் பெண் மீது தாக்குதல் நடத்திய அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கும் பணி தொடங்கியது.

சிறப்பு டிஜிபி புருஷோத்தம் சர்மா மீது குற்றப்பத்திரிகை தயாரிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய பிரதேச தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பியது. இதையடுத்து புருஷோத்தம் சர்மா அவர் வகித்து வந்த சிறப்பு டி.ஜி.பி. பதவியில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதனிடையே தன் மீதான நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என சிறப்பு டிஜிபி கூறியுள்ளார். மேலும் மாநில தலைமைச் செயலகத்துக்கும், மத்திய நிர்வாக தீர்ப்பாயத்திற்கும் தனது பணியிடை நீக்க நடவடிக்கையை ரத்து செய்யும்படி கடிதம் அனுப்பியிருந்தார்.

அவரது கோரிக்கை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவரது பணியிடை நீக்க நடவடிக்கையை உறுதி செய்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like