1. Home
  2. தமிழ்நாடு

ஐபிஎல் மெகா ஏலம் - மொத்தம் 574 வீரர்கள் - முழு லிஸ்ட்..!

1

ஐ.பி.எல். 18-வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது . இந்த தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது சவுதி அரேபியாவின் துறைமுக நகரான ஜெட்டாவில் வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஐ.பி.எல்-லில் பங்கேற்கும் 10 அணிகளும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களின் விவரங்களை அறிவித்துவிட்டன

ஏலத்திற்கு முதற்கட்டமாக 1,165 இந்தியர், 409 வெளிநாட்டவர் என்று மொத்தம் 1,574 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இதில் 48 இந்தியர்கள் உள்பட 320 வீரர்கள் சர்வதேச போட்டியில் ஆடியவர்கள் ஆவர்.


இந்நிலையில் பதிவு செய்யப்பட்ட 1574 வீரர்களின் எண்ணிக்கை தற்போது 574 ஆக குறைக்கப்பட்டு இறுதி கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 366 இந்தியர்கள் மற்றும் 208 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 10 அணிகள் மொத்தம் 204 இடங்களை நிரப்ப வேண்டும், அவற்றில் 70 வெளிநாட்டு வீரர்களுக்கானது.

இறுதி கட்ட பட்டியல் விவரம்,

கேப்டு இந்திய வீரர்கள் - 48

கேப்டு வெளிநாட்டு வீரர்கள் - 193

இணை நாட்டு வீரர்கள் - 3

அன்கேப்டு இந்திய வீரர்கள் -318

அதேபோல் இந்த மெகா ஏலத்தில் பங்கேற்கும் சீனியர் வீரர் என்ற பெருமையை 42 வயதாகும் ஜேம்ஸ் ஆண்டர்சன் பெற்றுள்ளார். அதேபோல் மெகா ஏலத்தில் பங்கேற்கும் சிறிய வீரராக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 13 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி தேர்வாகியுள்ளார். இவர் ஏற்கனவே இந்திய யு19 அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளதோடு, ரஞ்சி டிராபி தொடரிலும் விளையாடி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் மெகா ஏலத்தில் முதல் செட்டில் வரவுள்ள வீரர்களின் பட்டியலில் வெளியாகியுள்ளது.

அதில், ஜோஸ் பட்லர், ஸ்ரேயாஸ் ஐயர், ககிசோ ரபாடா, ரிஷப் பண்ட், அர்ஷ்தீப் சிங் மற்றும் மிட்சல் ஸ்டார்க் இடம்பெற்றுள்ளனர். அதேபோல் 2வது செட்டில் சாஹல், லிவிங்ஸ்டன், மில்லர், கேஎல் ராகுல், ஷமி, சிராஜ் ஆகியோரும், 3வது செட்டில் ப்ரூக், கான்வே, ஜேக் ஃபிரேசர், மார்க்ரம், படிக்கல், த்ரிப்பாட்டி, வார்னர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். 4வது செட்டில் அஸ்வின், வெங்கடேஷ் ஐயர், மிட்சல் மார்ஷ், மேக்ஸ்வெல், ஹர்சல் படேல், ரச்சின் ரவீந்திரா, ஸ்டாய்னிஸ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

5வது செட்டில் விக்கெட் கீப்பர்களான பேர்ஸ்டோவ், டி காக், குர்பாஸ், இஷான் கிஷன், சால்ட் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். நடராஜன், போல்ட், ஹேசல்வுட், பிரசித் கிருஷ்ணா, நார்கியே, கலீல் அஹ்மத் உள்ளிட்டோர் 6வது செட்டிலும், இடம்பெற்றுள்ளனர். மேலும் ஆஸ்திரேலியா அணியின் கேமரூன் க்ரீன் மெகா ஏலத்தில் பதிவு செய்யவில்லை என்று தெரிய வந்துள்ளது. இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஆர்ச்சரின் பெயர் ஏலப் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like