செப்டம்பர் 19 ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடக்கம் !! நிர்வாகக் குழு தலைவர் பிரிஜேஷ் பட்டேல்

செப்டம்பர் 19 ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடக்கம் !! நிர்வாகக் குழு தலைவர் பிரிஜேஷ் பட்டேல்

செப்டம்பர் 19 ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடக்கம் !! நிர்வாகக் குழு தலைவர் பிரிஜேஷ் பட்டேல்
X

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 29 -ம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தலைகாட்ட தொடங்கியிருப்பதால் ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்படக் கூடும் என்று கூறப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

இந்நிலையில் செப்டம்பர் 19 ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்குகிறது என ஐபிஎல் நிர்வாகக் குழு தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் ஐபிஎல் போட்டி நடத்த முடியாத சூழலில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகிறது. செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டி துவங்கவுள்ள நிலையில் நவம்பர் 8 ஆம் தேதி இறுதி போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newstm.in

Next Story
Share it