1. Home
  2. தமிழ்நாடு

IPL: ஓப்னிங் இறங்கி பெரும் ஏமாற்றம் அளித்த பென் ஸ்டோக்ஸ்..

IPL: ஓப்னிங் இறங்கி பெரும் ஏமாற்றம் அளித்த பென் ஸ்டோக்ஸ்..


ஐபிஎல் தொடரின் 26-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி பேர்ஸ்டோவ், டேவிட் வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக கம் இறங்கினர். அதிரடி வீரர்களான இருவரும் தொடக்கத்தில் இருந்தே ரன்கள் அடிக்க திணறினர்.

IPL: ஓப்னிங் இறங்கி பெரும் ஏமாற்றம் அளித்த பென் ஸ்டோக்ஸ்..

பேர்ஸ்டோவ் 16 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வார்னர் உடன் மணிஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. 14.4 ஓவரில் 96 ரன்கள் எடுத்திருந்த போது வார்னர் 48 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் 38 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் இந்த ரன்னை அடித்தார்.

ஓரளவுக்கு கை கொடுத்த மணிஷ் பாண்டே 44 பந்தில் 54 ரன்கள் சேர்த்து வெளியேறினார். கேன் வில்லியம்சன் - பிரியம் கார்க் ஜோடி 2.2 ஓவரில் 36 ரன்கள் அடிக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் அடித்துள்ளது.

159 ரன்கள் இலக்குடன் ராஜஸ்தான் அணி பேட்டிங் தொடங்கியது. தொடக்க வீரராக பட்லருடன் பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினார். ஏற்கனவே ஸ்டோக்ஸ் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தொடக்க வீரராக களமிறங்கியதால் ரசிகர்கள் குஷியானார்.

ஆனால் அவர் ஒரு பவுண்ட்ரி உள்பட 5 ரன்கள் மட்டுமே எடுத்து அகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

5 ஓவர்களில் 3 முக்கிய விக்கெட்களை இழந்த ராஜஸ்தான் அணி 36 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like