ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான மினி வீரர்கள் ஏலம் ஒர் பார்வை ..!
ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான மினி வீரர்கள் ஏலம் முதன்முறையாக துபாயில் இன்று (டிசம்பர் 19) மதியம் தொடங்கியது.இந்த நிலையில் ஆரம்பத்திலேயே வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோவ்மன் போவலை ரூ.7.4 கோடிக்கு அதிரடியாக வாங்கியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.
தொடர்ந்து இங்கிலாந்து வீரர் ஹேரி ப்ரூக்கை ரூ.4 கோடிக்கு டெல்லி அணியும், உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றித்தேடி தந்த ஆஸ்திரேலியா டிராவிஸ் ஹெட்டை சென்னையுடன் போட்டிப்போட்டு ரூ.6.8 கோடிக்கு வாங்கியது ஹைதாராபாத் அணி.
எனினும் முதல் செட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீரர் கருண் நாயர், மணீஷ் பாண்டே மற்றும் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், தென்னாப்பிரிக்கா வீரர் ரூசோவ் ஆகியோரை எந்த அணியும் எடுக்க முன்வராதது ஆச்சரியம் அளித்துள்ளது
- ஐபிஎல் 2024 மினி ஏலத்தில் முதல் வீரராக மே.இ.தீவுகள் வீரர் ரோவ்மன் பவலை ₹7.4 கோடிக்கு வாங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி
- ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக ₹20.5 கோடிக்கு பேட் கம்மின்ஸை ஏலத்தில் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
- கடந்த ஆண்டு சாம் கரணை ₹18.5 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்ததே அதிகபட்ச தொகையாக இருந்தது.
- ஆப்கானிஸ்தான் வீரர் அஸ்மதுல்லா ஓமர்சாயை அடிப்படை விலையான ₹50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது குஜராத் அணி
- சென்னை அணியில் ஷர்துல் தாக்கூர்.. ₹4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சி.எஸ்.கே அணி
- நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை ₹1.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்
- அடிப்படை விலையான ₹1.5 கோடிக்கு இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்காவை ஏலத்தில் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
- ஐபிஎல் 2024 மினி ஏலத்தின் முதல் சுற்றில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை
- ஆஸ்திரேலிய வீரர் ட்ராவிஸ் ஹெட்டை ₹6.8 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி!
- இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்கை ₹4 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது டெல்லி கேபிடல்ஸ் அணி