1. Home
  2. தமிழ்நாடு

ஐபிஎல் 2024 விருதுகள் முழு விவரம் ஒர் பார்வை ..!

1

 சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை மிகவும் எளிதில் வென்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இது கொல்கத்தா அணிக்கு ஐபிஎல் கோப்பையை வெல்வது மூன்றாவது முறையாகும்.

இந்த நிலையில், ஐபிஎல் 2024 சாம்பியன் பட்டத்தை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, ரன்னர்ஸ்-அப் ஆன சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 12.5 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கும் முறையை 7 கோடி ரூபாய் மற்றும் 6.5 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, ஐபிஎல் 2024 சீசனில் ஆரஞ்சு தொப்பியை விராட் கோலி பெற்றுள்ளார். 741 ரன்கள் எடுத்த விராட் கோலிக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், 24 விக்கெட்டுகளுடன் பர்பிள் கேப் ஹர்ஷல் படேலுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது. மேலும்,

  • Most Valuable Player of the Season: சுனில் நரேன் (10 லட்சம் ரூபாய்)
  • Ultimate fantasy Player of the Season: சுனில் நரேன்
  • அதிக பவுண்டரிகள் - டிராவிஸ் ஹெட் (64)
  • அதிக சிக்ஸர்கள் - அபிஷேக் ஷர்மா (42)
  • Striker of the Season: ஜாக் ப்ராசர் - மெக் குரூக் (234.04)
  • Emerging Player of the Season: நிதீஷ் குமார் ரெட்டி (20 லட்சம் ரூபாய்)
  • Catch of the Season: ராமன்தீப் சிங்


Pitch and Ground Award: ஹைதராபாத் கிரிக்கெட் அசோசியேசன்
முன்னதாக நேற்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் தேர்வு செய்வதற்கு இணங்க பேட்டிங்கில் ஹைதராபாத் அணி சோபிக்கவில்லை.

மாறாக, 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எடுத்திருந்தது. இதில் அதிகபட்சமாகவே பேட் கம்மின்ஸ் 24 ரன்கள் எடுத்திருந்தார்.

இதனை அடுத்து 114 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட்ரஸ் அணி, தங்களது வெற்றி இலக்கை 10.3 ஓவர்களிலேயே எளிதாக அடைந்தது. அந்த நேரத்தில் இரண்டு விக்கட்டுகளை மட்டுமே கொல்கத்தா அணி இழந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like