போதையில் நள்ளிரவு பேய் மாதிரி கார் ஓட்டிய இளம்பெண்!

நன்றாக குடித்துவிட்டு முழு போதையில் காரை ஓட்டி பொதுமக்களை அச்சுறுத்திய இளம்பெண்ணை காவல்துறையினர் கடுமையாக கண்டித்து அனுப்பினர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் வடபழனி கார் ஒன்றஉ தாறுமாறாக சென்று கொண்டிருந்தது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். அந்த கார் கர்நாடகா பதிவெண் கொண்டது. மற்ற வாகனங்கள் மீது மோதுவது போல் அந்த கார் சென்றது.
இதனையடுத்து வாகன ஓட்டிகள் சிலர் அந்த காரை விரட்டிச் சென்று வடபழனி அருகே மடக்கிப் பிடித்தனர். காரில் இருந்து கீழே இறங்கிய அந்தப் பெண் நிற்க முடியாமல் நிலை தடுமாறினார், பேச முடியாமல் உளறினார்.
தகவலறிந்து வந்த வடபழனி போலீசார் போதையில் இருந்த இளம்பெண்ணை கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் ஆஷா வனிதா (30) என்பது தெரியவந்தது. கர்நாடக மாநிலம் உடுப்பியை சேர்ந்தவர். நுங்கம்பாக்கத்தில் நண்பர்களுடன் மது விருந்தில் கலந்து கொண்டு பின்னர் காரில் வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அதிவேமாக வாகனம் ஓட்டியது, பொதுமக்களை அச்சுறுத்தியது, மது போதையில் வாகனம் ஓட்டியது ஆகிய பிரிவுகளில் போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர் போலீசார் அவரை கடுமையாக எச்சரித்து எழுதிவாங்கி கொண்டு சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.
newstm.in