1. Home
  2. தமிழ்நாடு

மிரட்டும் வெயில்... தமிழக மக்களுக்கு ஷாக் நியூஸ்..!

1

தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி எடுத்தது. கடந்த 20-ம் தேதி மட்டும் சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடனும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. இதே போல் கடந்த 21-ம் தேதி தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தது. 

அதன்பிறகு வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்தில் வெப்பநிலை படிப்படியாக 3 முதல் 5 டிகிரி வரை உயரக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-  

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 30-ம் தேதி  வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.  தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் 28-ம் தேதி வரை  அதிகபட்ச வெப்பநிலை அடுத்த ஐந்து தினங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஒரிரு இடங்களில் அசெளகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.  

Trending News

Latest News

You May Like