1. Home
  2. தமிழ்நாடு

மிரட்டும் புதிய வகை கொரோனா வைரஸ் ! உலகளவில் மீண்டும் அவசர நிலைக்கு வாய்ப்பு...

மிரட்டும் புதிய வகை கொரோனா வைரஸ் ! உலகளவில் மீண்டும் அவசர நிலைக்கு வாய்ப்பு...


தென் ஆப்பிரிக்காவில் பி.1.1.529 என்ற புதிய வகை கரோனா வைரஸ் முதலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாக இந்த வைரஸ் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். முதன் முதலில் இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கடந்த வாரம் கண்டறியப்பட்டது. இந்தப் புதிய வகை வைரஸ் குறித்து முழுமையாகத் தெரியாத நிலையில், அறிவியல் வல்லுநர்கள் பெரிதும் அச்சப்படுகிறார்கள். இந்த வகை வைரஸ், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டவை, வேகமாகப் பரவும், கரோனாவின் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

இந்தப் புதிய வைரஸ் ஏற்கெனவே அண்டை நாடுகளுக்குப் பரவிவிட்ட நிலையில் மேலும் பல நாடுகளுக்கும் பரவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. குறிப்பாக போட்ஸ்வானா நாட்டில் இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்குக் கூட இந்தப் புதிய வைரஸ் தாக்கியுள்ளது.

மிரட்டும் புதிய வகை கொரோனா வைரஸ் ! உலகளவில் மீண்டும் அவசர நிலைக்கு வாய்ப்பு...

இந்தநிலையில், தென் ஆப்பிரிக்காவில் இருந்து இஸ்ரேல் திரும்பிய பயணி ஒருவருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து அநாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், மாறுபட்ட வைரஸ் தொற்று ஏற்பட்ட நபர் மற்றும் 2 பயணிகள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திகொண்டவர்கள் என தெரிவித்தனர்.

இந்தநிலையில் புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து விவாதிக்க இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னெட் உடனடியாக அமைச்சரவையை கூட்டினார். அதில், இது டெல்டா மாறுபாட்டை விட மிகவும் தொற்றுநோயாகவும் வேகமாகவும் பரவுவதாகவும் அவர் கூறினார். இது தடுப்பூசிகளுக்கு கட்டுப்படுமா? அல்லது ஆபத்தானதா என்பது குறித்த தகவல்களை அதிகாரிகள் சேகரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

மிரட்டும் புதிய வகை கொரோனா வைரஸ் ! உலகளவில் மீண்டும் அவசர நிலைக்கு வாய்ப்பு...

மேலும், நாம் தற்போது அவசரகால விளிம்பில் இருக்கிறோம். அனைவரும் தயாராக இருக்குமாறும், 24 மணி நேரமும் பணியில் முழுமையாக ஈடுபடுமாறும் அமைச்சர்களை கேட்டுக்கொண்டார்.

newstm.in

Trending News

Latest News

You May Like