1. Home
  2. தமிழ்நாடு

இளம்பெண்ணின் வாட்ஸ்அப்-க்கு வந்த அந்தரங்க புகைப்படங்கள்.. கடன் கொடுத்து அடாவடி !

இளம்பெண்ணின் வாட்ஸ்அப்-க்கு வந்த அந்தரங்க புகைப்படங்கள்.. கடன் கொடுத்து அடாவடி !


சென்னையில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கொரோனா காலக்கட்டத்தில் வருவாய் இழந்து சிரமம் ஏற்படவே, கையில் இருந்த பணமும் காலியானது.

இதனால் ஐ கிரிடிட் என்ற அப்ளிகேசனில் அப்பெண் ரூ.20,000 லோன் பதிவு செய்தார். அடுத்த 7 நாட்களில் 7 ஆயிரம் ரூபாய் வட்டியுடன் திரும்ப செலுத்துவதாக கூறி அதற்கான ஆப்சனை தேர்வு செய்து பணம் பெற்றார்.

அவர் பதிவு செய்த சில நாட்களில் அவரது வங்கி கணக்கிற்கு பணமும் பந்ததாக கூறப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட நாளில் அப்பெண் பணம் கட்டத்தவறிவிட்டார்.

இளம்பெண்ணின் வாட்ஸ்அப்-க்கு வந்த அந்தரங்க புகைப்படங்கள்.. கடன் கொடுத்து அடாவடி !

இதனையடுத்து அவர் கடன் பெற்ற நிறுவனத்தில் இருந்து, பணம்கட்டச் சொல்லித் தொலைப்பேசி அழைப்புகள் வந்துள்ளன. ஒரு குறிப்பிட்ட எண்ணில் இருந்து அந்தப் பெண்ணின் வாட்ஸ்அப்-க்கு, அவரது செல்போனில் இருக்கும் அந்தரங்க புகைப்படங்கள் வந்துள்ளன.

பின்னர் கடன் வழங்கிய நிறுவனத்தினர் தரப்பில் தான் அந்த புகைப்படங்கள் அனுப்பி வைத்துள்ளதாக அப்பெண் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண், அவர்களிடம் கேட்டுள்ளார். எனினும் உரிய பதில் இல்லை என கூறப்படுகிறது.

இளம்பெண்ணின் வாட்ஸ்அப்-க்கு வந்த அந்தரங்க புகைப்படங்கள்.. கடன் கொடுத்து அடாவடி !

பின்னர் அப்பெண் விசாரித்தப்போது கடன் கொடுத்து திரும்ப செலுத்த முடியாமல்போனால் இதுபோல் செயல்பட்டு பணம் வசூலிப்பதை அந்த அப்ளிகேசன் வாடிக்கையாகக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்தப் பெண் இதுகுறித்து நுகர்வோர் பாதுக்காப்பு மையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார்.

லோன் கொடுத்த அப்ளிகேஷன் தரப்பு , இதுபோன்று மிரட்டுவது எங்கள் வழக்கம் இல்லை என்றும் பணம் வசூலிக்கும் ஏஜென்சிஸ் இது போன்று செயல்பட்டிருப்பதாகவும் விளக்கம் கொடுத்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like