1. Home
  2. தமிழ்நாடு

யூடியூப் சேனலில் அளித்த பேட்டியை அனுமதி இல்லாமல் ஒளிபரப்பு..! இளம் பெண் தற்கொலை முயற்சி!

1

 வீரா டாக்ஸ் டபுள் எக்ஸ் (Veera Talks Double X) என்ற பிரபல யூடியூப் சேனல் ஒன்று பொதுமக்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம் பேட்டி எடுத்து, அதனை ஒளிபரப்பு செய்து வருகின்றன.

இதில் அதிகமான இரட்டை அர்த்த கேள்விகளும், பதில்களும் அடங்கி இருப்பதாக கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் மால் ஒன்றிற்குச் சென்ற இந்த யூடியூப் சேனலின் பெண் தொகுப்பாளர், அங்கிருந்த ஒரு பெண்ணிடம் சில கேள்விகளை கேட்டுள்ளார்.

அதற்கு அப்பெண் ஜாலியாக சில பதில்களை கொடுத்துள்ளார். இருப்பினும், அவர் தன்னுடைய அனுமதி இல்லாமல் இதனை வெளியிடக் கூடாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டு, சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதற்கு கமெண்டுகளும் குவிந்து வந்தன. இந்த நிலையில், இதனை பார்த்த அந்தப் பெண் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

இதனால் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனை அடுத்து, தற்போது அந்த பெண் கீழ்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பின்னர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசாரிடம் அப்பெண் கூறுகையில், "நான் முதலில் அந்த யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுப்பதற்கு மறுப்பு தெரிவித்தேன்.

இறுதியாக தன்னுடைய அனுமதி இல்லாமல் பேட்டியை வெளியிட மாட்டோம் என அவர்கள் உறுதியளித்தனர். இதனால் நானும் ஜாலியாக சில கருத்துக்களை அந்த பேட்டியில் தெரிவித்திருந்தேன்.

ஆனால், என்னுடைய அனுமதி இல்லாமல் அந்த பேட்டியை வெளியிட்டு விட்டனர். இது எனக்கு அவமானமாக ஏற்பட்டு விட்டது. இந்த வீடியோ காட்சிகளை என்னுடைய அண்ணனோ அல்லது உறவினர்களோ பார்த்து இருந்தால் என்ன ஆவது?

எனவே, சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் மீதும், பெண் தொகுப்பாளினி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

இந்த இளம் பெண்ணுக்கு பெற்றோர் இல்லாத நிலையில், அவரது அண்ணனின் அரவணைப்பில் பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இது தொடர்பாக தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்த கீழ்பாக்கம் காவல்துறையினர், சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் நடத்தி வந்த சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த ராம், அவரது உதவியாளர் யோகராஜ் மற்றும் பெண் தொகுப்பாளினியான அண்ணாநகரைச் சேர்ந்த ஸ்வேதா ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

சமீபத்தில், தனது குழந்தையின் பாலினம் குறித்து வெளிப்படையாக தெரிவித்ததாக யூடியூபர் இர்பான் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like