1. Home
  2. தமிழ்நாடு

தேர்தல் சுவாரசியம் : 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்..!

1

பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்துக்கு (80 தொகுதிகள்) அடுத்தபடியாக மகராஷ்டிரா 48 தொகுதிகளை கொண்ட 2-வது பெரிய மாநிலமாக விளங்குகிறது. இதனால் மத்தியில் ஆட்சியை நிர்ணயிப்பதில் மகராஷ்டிரா முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக பார்க்கப்படுகிறது. 

இந்த மாநிலத்தில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உடைந்ததை அடுத்து, பெரும் குழப்பத்துக்கு மத்தியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிகபட்சமாக பா.ஜ.க.  28 தொகுதிகளில் போட்டியிட்டது. 

சிவசேனா-15, தேசியவாத காங்கிரஸ்-4, ஆர்.எஸ்.பி-1 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இண்டியா  கூட்டணியில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா-21, காங்கிரஸ்-17, தேசியவாத காங்கிரஸ்-சரத்சந்திரபவார் கட்சி-10 தொகுதிகளிலும் களம் கண்டன.

 நேற்று முன்தினம் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவில் இண்டியா  கூட்டணி 30 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 13 தொகுதிகளை கைப்பற்றியது. முன்னாள் முதல்வர்  உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா 9 தொகுதிகளிலும், சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ்-சரத்சந்திர பவார் கட்சி 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

இந்த நிலையில், மும்பை வடமேற்கு தொகுதியில் சிவ சேனா (ஏக்நாத் அணி) வேட்பாளர் ரவீந்திர வைக்கார் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் மொத்தம் 4,52,644 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். 

இவரை எதிர்த்து போட்டியிட்ட சிவ சேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) வேட்பாளர் அமோல் கஜானன் கீர்த்திகர் 4,52,596 வாக்குகளை பெற்று 48 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.  

Trending News

Latest News

You May Like