1. Home
  2. தமிழ்நாடு

பேருந்து நிறுத்தங்களில் தீவிர தூய்மை பணி!

1

பயணிகளின் வசதிக்காக அனைத்து பேருந்து நிலையங்களிலும் கடந்த ஆகஸ்டு மாதம் தீவிர தூய்மை பணிகள் நடந்தது.

அப்போது, குப்பைகள், கட்டிடக்கழிவுகள், சுவரொட்டிகள் மற்றும் விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டது. பயணிகளின் இருக்கைகள் சுத்தம் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 2-வது கட்டமாக 1,363 பேருந்து நிலையங்களில் இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை தீவிர தூய்மை பணிகள் நடைபெற உள்ளது. அதன்படி, அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் அகற்றப்படும். பேருந்து நிழற்குடைகள் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு பழுதுகள் சரி செய்யும் பணி நடைபெறும் எனச் சென்னை மாநகராட்சி தெரிவித்து இருந்தது.

அன்படி, இன்று காலை முதல் பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் 2-ம் கட்டமாகத் தூய்மைப் பணிகள் நடைபெற்றது. இப்பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Trending News

Latest News

You May Like