ஜனவரி 31 வரை தீவிர ஊரடங்கு – அரசு திடீர் உத்தரவு!!

புதுச்சேரியில் தீவிர கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ஒற்றை இலக்க எண்களில் பதிவாகி வந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, தற்போது மீண்டும் உயர்ந்து வருகிறது.
இதனிடையே புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று புதுச்சேரி அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அதன்படி இன்று முதல் புதுச்சேரியில் உள்ள மால்கள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், பார்கள், கலையரங்கம் உள்ளிட்ட இடங்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிமாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு வரும் வாகனங்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே பயணிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. கோவில்களில் பக்தர்கள் இன்றி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்களை மட்டுமே புதுச்சேரி எல்லைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி பள்ளிகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
newstm.in