திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமதிப்பு.. காலையிலேயே பதற்றம் !

திருச்சியில் தந்தை பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் பெரியார் அமைக்கப்பட்டுள்ளது. மர்ம நபர்கள் அந்த சிலை மீது காவி வர்ணம் ஊற்றியும், செருப்பு வீசியும் அவமதிப்பு செய்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மைக்காலமாக பெரியார் சிலை மீது காவிச்சாயம் பூசுவது, சேதப்படுத்துவது அதிகரித்து வருகிறது.
newstm.in