இலவச ரேஷன் பொருளுக்கு பதிலாக ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரருக்கும் ரூ.490 வழங்க திட்டம்..!

தீபாவளி பண்டிகையையொட்டி மத்திய மற்றும் மாநில அரசுகள் பொதுமக்களுக்கு ஏகப்பட்ட பரிசுகளை வழங்கி வருகின்றது. அந்த வகையில், புதுச்சேரி மாநிலத்தில் வழக்கமாகவே தீபாவளி பண்டிகைக்கு ரேஷன் கடைகள் வாயிலாக இலவச அரிசி, சர்க்கரை மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்படும். ஆனால், பெரும்பாலான தாய்மார்களுக்கு சில மளிகை பொருட்கள் உபயோகப்படாத நிலையில் தற்போது தீபாவளிக்கான பரிசு பொருள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதாவது, இலவச ரேஷன் பொருள்களுக்கு பதிலாக இலவச அரிசி மற்றும் சர்க்கரைக்கு இணையாக ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.490 வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரருக்கும் வங்கி கணக்கு மூலமாகவே ரூ.490 வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.