உலகம் முழுவதும் இன்ஸ்டாகிராம் சேவை முடங்கியது..!
உலக அளவில் அதிகம் பேர் பயன்படுத்தும் செயலி இன்ஸ்டாகிராம். இன்ஸ்டாவில் உள்ள ரீல்ஸ்களுக்கு அனைவரும் ரசிகர்கள் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள இன்ஸ்டாகிராம் தற்போது முடங்கி உள்ளது.
இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் முன்னர் ட்விட்டராக இருந்த தற்போதுள்ள எக்ஸ் தளத்தில் இன்ஸ்டாகிராம் முடங்கி உள்ளதாக புகார்கள் தெரிவித்து வருகிறார்கள். பயனர்கள் பலரும் இன்ஸ்டா ரீல்களைப் பார்க்க முடியவில்லை.
சுமார் 41% யூசர்கள் லாகின் செய்வதிலேயே சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். அதேபோல சுமார் 40% பேர் சர்வர் இணைப்புச் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். அவர்களுக்கு இன்ஸ்டாகிராம் ஃபீட்கள் லோட் ஆகவில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல இன்னும் பல இன்ஸ்டாகிராம் செயலியையே ஓபன் செய்ய முடியவில்லை எனக் கூறியிருக்கிறார்கள்.
இதற்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. அதேபோல இன்ஸ்டாகிராம் தளமும் இது தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.கடந்த 7 நாட்களில் இரண்டாவது முறையாக இதுபோல முடங்கியுள்ளது. முன்னதாக கடந்த நவ. 13ம் தேதியும் இதுபோல முடங்கிய நிலையில், மீண்டும் அதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது.