1. Home
  2. தமிழ்நாடு

3 வித காய்ச்சல்களால் தவிக்கும் பொதுமக்கள்!  சிறப்பு பரிசோதனை நடத்த கோரிக்கை!

3 வித காய்ச்சல்களால் தவிக்கும் பொதுமக்கள்!  சிறப்பு பரிசோதனை நடத்த கோரிக்கை!


அரியலூரில் வைரஸ், டெங்கு மற்றும் கொரோனா என மூன்றுவித காய்ச்சலால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதால், சிறப்பு முகாம்களை அமைத்து பரிசோதனை நடத்த வேண்டும் கோரிக்கை என கோரிக்கை எழுந்துள்ளது.

கடந்த ஆறுமாதங்களாக கொரேனாவிற்கு அறிகுறி காய்ச்சலும் ஒன்று என்று அறியப்பட்டதால், காய்ச்சல் வந்தால் அரசு மருத்துவமனைக்கு சென்று சளிபரிசோதனைகள் எடுத்து நோய் கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் கடந்த 15தினங்களாக பரவலாக நல்லமழை பெய்துவருகிறது. அரியலூர் மாவட்டத்திலும் விட்டுவிட்டு நல்லமழை பெய்துவரும் நிலையில் பொதுமக்களுக்கு அதிக அளவில் காய்ச்சல் அறிகுறிகள் தென்படுவதால் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். தற்போதைய நிலையில் பொதுமக்களை மழைகாலம் ஆரம்பித்துள்ளதால் சாதாரான பருவகாய்ச்சல், டைபாய்ட் சுரம் ஆகியவ¬யும் பரவி வருகிறது. மேலும் கொசு தொந்தரவு அதிகமானதால் டெங்கு காய்ச்சல் பரவத்தொடங்கி தற்போது அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள டெங்கு வார்டில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

3 வித காய்ச்சல்களால் தவிக்கும் பொதுமக்கள்!  சிறப்பு பரிசோதனை நடத்த கோரிக்கை!

மேலும் கடந்த ஆறுமாதமாக பரவிவரும் கொரோனா தொற்று இதுவரை முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை. இதனால் தற்போது பொதுமக்களுக்கு வரும் காய்ச்சல் எந்த ரகம் என்று கண்டறிவதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொரோனா என்று மருத்துவமனையில் உள்நோயாளியாக மாறிவிடுவமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் தாங்களாகவே சுயமாக கடைகளில் மாத்திரை வாங்கி கொள்வது அதிகரித்து வருகிறது.
மேலும், வைரஸ், டெங்கு மற்றும் கொரோனா என மூன்றுவித காய்ச்சலால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே டைபாய்ட், டெங்கு, கொரோனா காய்ச்சல்கள் குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடம் அதிக அளவில் தமிழகஅரசு கொண்டு செல்ல வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like