வெகுளி ஹீரோ... சரக்கு ஹீரோயின்... வெளியான ரோமியோ படத்தின் ட்ரைலர்..!
‘பிச்சைக்காரன் 2’, ‘கொலை’ படங்களைத் தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனி புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். ‘ரோமியோ’ (Romeo) என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் நாயகியாக மிருணாளினி ரவி நடிக்கிறார். படத்தை விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார். யூடியூப்பில் ‘காதல் டிஸ்டன்ஸிங்’ என்ற தொடரை இயக்கிய இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் படத்தை இயக்குகிறார். பரத் தனசேகர் இசையமைக்கும் படத்தின் படப்பிடிப்பு மலேசியா, பாங்காக், ஹைதராபாத், பெங்களூர், தென்காசி மற்றும் மகாபலிபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது
விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், சுதா உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகிறது.
ரொமான்டிக் காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இப்படத்துக்கான போஸ்டரில் விஜய் ஆண்டனி அப்பாவியாக அமர்ந்திருக்க, மனைவி மிருணாளினி மதுவை கோப்பையில் ஊற்றும் வகையிலான போஸ்டர் கவனம் பெற்றுள்ளது
இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் சற்று முன் வெளியானது