1. Home
  2. தமிழ்நாடு

நீலகிரி மாவட்டத்துக்கு புதிய ஆட்சியர் நியமனம் - இன்னசென்ட் திவ்யாவுக்கு வாய்ப்பு மறுப்பு !!

நீலகிரி மாவட்டத்துக்கு புதிய ஆட்சியர் நியமனம் - இன்னசென்ட் திவ்யாவுக்கு வாய்ப்பு மறுப்பு !!

கடந்த 2017ஆம் ஆண்டு நீலகிரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்ட இன்னசென்ட் திவ்யா, கடந்த சில நாட்களுக்கு முன் மாற்றப்பட்டு, கீர்த்தி பிரியதர்ஷினி நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக எஸ்.பி.அம்ரித் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு தலைமைச் செயலாளர் அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். நீலகிரி ஆட்சியர் (கூடுதல் பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியர் நியமனம்.

நாளை (26.11.2021) காலை 10 மணிக்கு நீலகிரி மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக அம்ரித் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஆட்சியர் அம்ரித் இதற்கு முன்பு நகராட்சி நிர்வாகத்தின் இணைய ஆணையராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

நீலகிரி மாவட்டத்துக்கு புதிய ஆட்சியர் நியமனம் - இன்னசென்ட் திவ்யாவுக்கு வாய்ப்பு மறுப்பு !!

நீலகிரி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த இன்னசென்ட் திவ்யா மீண்டும் நீலகிரி மாவட்டத்தில் பணி அமர்த்தப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது அம்ரித் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக யானை வழித்தட வழக்கில் நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்து வந்த இன்னசென்ட் திவ்யாவை மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் டை விதித்திருந்தது. தொடர்ந்து நீலகிரி மாவட்ட ஆட்சியராக ( கூடுதல் பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி நியமிக்கப்பட்டார்.

நீலகிரி மாவட்டத்துக்கு புதிய ஆட்சியர் நியமனம் - இன்னசென்ட் திவ்யாவுக்கு வாய்ப்பு மறுப்பு !!

இந்தநிலையில், தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் தடையை உச்ச நீதிமன்றம் விலக்கியது. இந்த சூழலில் தற்போது நீலகிரி மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக அம்ரித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like