1. Home
  2. தமிழ்நாடு

மனிதாபமற்ற செயல்..! வீட்டுக்கே சென்று 2.5 லட்சம் அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

1

திருச்சூர் மருத்துவமனைக்கு பொன்னானி என்ற பகுதியில் இருந்து ஆம்புலன்ஸ் ஒன்று அசுர வேகத்தில் பறந்து சென்று கொண்டு இருந்தது. சாலக்குடி என்ற இடம் வந்தபோது அதே சாலையில் சொகுசு கார் ஒன்று முன்னே சென்று கொண்டிருந்ததை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கவனித்தார்.

ஏற்கனவே சைரன் ஒலி எழுப்பியபடி இருக்க, வழி கிடைத்துவிடும் என்று காரின் பின்னே ஆம்புலன்சை ஓட்டுநர் ஓட்டிக் கொண்டு இருந்தார். ஆனால்  முன்னே சென்ற கார் வழி விடாமல் இருக்கவே, மீண்டும் ஹார்ன் அடித்துள்ளார். ஆனால் ஒவ்வொரு முறையும் ஹார்ன் ஒலி எழுப்பியும், காரில் இருந்தவர் வழி விடாமல் ஓட்டிக் கொண்டு இருந்திருக்கிறார்.

கிட்டத்தட்ட 2 நிமிடங்களாக வழிவிடுவது போல் வருவது, பின்னர் அதற்கு நேர்மாறாக வழிவிடாமல் ஆம்புலன்சுக்கு தொந்தரவு செய்வதுமாக கார் ஓட்டுநர் இருந்துள்ளார். அவரின் இந்த சேட்டை, ஆம்புலன்சில் இருந்த காரில் வீடியோவாக பதிவாகி இருந்தது. வீடியோவில் இருந்த காட்சிகளில் வண்டியின் பதிவு எண் தெளிவாக பதிவாகி இருந்தது.

கார் ஓட்டுநரின் செயலை கண்டித்த பலரும் அதிகபட்ச தண்டனை விதித்து, ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினர்

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக, உடனடியாக களத்தில் இறங்கிய காவல்துறையினர் கார் பதிவெண்ணை அடிப்படையாக கொண்டு உரிமையாளர் வீட்டை அடையாளம் கண்டு,  நேராக அங்கு சென்று ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்து கடுமையாக எச்சரித்தனர்.

Trending News

Latest News

You May Like