ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த இன்போசிஸ்..! இனி தினமும் 9.15 மணி நேரம் பணி..!

இன்போசிஸ் ஊழியர்கள் நாள்தோறும் (வாரத்தில் 5 பணி நாட்கள்) 9.15 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என்று அனைவருக்கும் மின்னஞ்சல் மூலமாக அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.
அலுவலகத்தில் இருப்பவர்கள் மட்டும் அல்லாது தொலைதூரங்களில் அதாவது வீடுகளில் இருந்து பணிபுரிபவர்களும் 9.15 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மின்னஞ்சலை இன்போசிஸ் நிறுவன மனித வள மேம்பாட்டுத் துறை அனுப்பி உள்ளது. பணி நேரம் இனி கண்காணிக்கப்படும், மாதத்தின் இறுதியில் அந்த விவரங்கள் அனைத்தும் ஊழியர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று மனித வள மேம்பாட்டுத் துறை கூறி உள்ளது.