1. Home
  2. தமிழ்நாடு

குன்னூர் வெலிங்டன் இராணுவ மையத்தில்  காலாட்படை தினம் !

குன்னூர் வெலிங்டன் இராணுவ மையத்தில்  காலாட்படை தினம் !


குன்னூர் வெலிங்டன் இராணுவ மைய வளாகத்தில் 74 - வது காலாட்படை தினம் இன்று கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டன் இராணுவ மைய வளாகத்தில் உள்ள போர் நினைவுத் தூனில் காலாட்படை தலைவர் லெப்டினென் ஜெனரல் ஓய்.வி.கே.மோகன் தலைமையில் முன்னால், இன்னால் இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டு இந்திய இராணுவத்தின் துணிச்சலான வாழ்க்கையின் மிக உயர்ந்த தியாகத்தை ய்த காலாட்படை வீரர்களுக்கு வெலிங்டன் போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பாகிஸ்தான் இராணுவம் ஜம்மு - காஷ்மீரை கைப்பற்றுவதை தடுப்பதில் காலாட்படை மிக முக்கிய வகிக்கிறது. ஸ்ரீ நகரில் இந்திய இராணுவத்தின் முதல் காலாட்படை பட்டாலியன் தரையிரங்கியதை நினைவுக் கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 27-ந் தேதி கரலாட்படை தினம் கொண்டாப்படுகிறது.

இதனையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் வெலிங்டன் இராணுவ மையத்தில் உள்ள போர் நினைவுத் துானில் நடைப்பெற்று வருகிறது . இந்த போர் நினைவுத் தூண் 1950 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இராண்டாம் உலகப்போரில் இருந்து இன்று வரை உயிர் தியாகம் செய்த மெட்ராஸ் ரெஜிமென்ட் வீரர்களின் நினைவாக இந்த தூண் விளங்குகிறது.

இந்த நிகழ்வு இந்திய இராணுவத்தின் காலாட்படைக்கு அதன் வீரம், தைரியம் மற்றும் தியாகத்திற்கான அஞ்சலி செலுத்தும் தினமாக இன்று கொண்டாடப்படுகிறது முன்னதாக பயிற்சி பெற்று வரும் இளம் இராணுவ வீரர் மற்றும் அதனை தொடர்ந்து ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி உட்பட இராணுவ அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும், காலாட்படை தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஒய்.வி.கே.மோகன் மலர் வளையம் வைத்து இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

Trending News

Latest News

You May Like