1. Home
  2. தமிழ்நாடு

தொழிலதிபர் ராமோஜி ராவ் காலமானார்..!

Q

ராமோஜி குழுமத்தின் தலைவர் சி.எச். ராமோஜி ராவ்(88) உடல்நலக் குறைவால் சனிக்கிழமை அதிகாலை மருத்துவமனையில் காலமானார்.

கடந்த சில நாட்களாக வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு காலமானார்.இதனை ஈ நாடு ஊடக குழுமம் உறுதி செய்துள்ளது.

1974 இல் முன்னணி தெலுங்கு மொழி நாளிதழான ஈநாடு தொடங்கினார். திரைத்துறை, கல்வி, நாளிதழ் என பல்துறை சாதனையாளரான ராமோஜி ராவுக்கு 2016 இல் இந்திய அரசு பத்மவிபூஷன் விருது வழங்கி கௌரவித்தது.

ஹைதராபாத்தில் உள்ள பிரம்மாண்ட ராமோஜி ஃபிலிம் சிட்டியை நிறுவியவரும் இவர்தான். இந்த தளத்தில் பாகுபலி, புஷ்பா உள்பட பல்வேறு பிரபல திரைப்படங்கள் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராமோஜி ராவ் மறைவுக்கு திரை, அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். 

Trending News

Latest News

You May Like