இந்திரஜாவுக்கு குழந்தை பிறந்தது..குவியும் வாழ்த்து!

காமெடி நடிகராக விஜய் டிவியில் அறிமுகமாகி தற்போது திரைப்படங்களில் காமெடி கேரக்டரிலும் கதாநாயகனாகவும் நடித்துக் கொண்டிருக்கும் ரோபோ சங்கரின் ஒரே மகளான இந்திரஜாவிற்கு அவருடைய உறவினரான கார்த்திக் என்பவரோடு கடந்த வருடத்தில் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகு ரோபோ சங்கர் மகள் இந்திரஜா மற்றும் அவருடைய கணவர் கார்த்திக் இருவரும் விஜய் டிவியில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அந்த நிகழ்ச்சியில் இவர்கள் சில வாரங்கள் போட்டியாளராக இருந்தபோது இந்திரஜா கர்ப்பமாக இருப்பதால் நிகழ்ச்சியில் பாதியிலிருந்து விலகி இருந்தனர்.
அதற்குப் பிறகு தங்களுடைய குழந்தைகுறித்து அடிக்கடி அப்டேட் கொடுத்துக் கொண்டிருந்தனர். அதுபோலச் சமீபத்தில் இந்திராஜாவிற்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு நடைபெற்றது. அப்போது ரோபோ சங்கர் தனக்கு பேரன் தான் பிறக்கப் போகிறான் என்று சொல்லியிருந்தார்.
ஆனால் ரோபோ சங்கர் மனைவி இவர் இப்படித்தான் இந்திரஜா பிறக்கும் போதும் சொல்லிக்கொண்டு இருந்தார். ஆனால் பிறந்தது பெண் குழந்தை.
அதுபோல இப்பொழுதும் எங்களுக்குப் பேத்தி தான் பிறக்கப் போகிறார். எங்களுடைய பேத்திக்காக நாங்கள் பல பொருட்களை வாங்கி வைத்திருக்கிறோம்.
பெண் குழந்தை பிறந்தால் அந்தப் பெண் குழந்தைக்கு நகை நட்டு போட்டு அழகு பார்த்து என்னுடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வேன்.
அதே நேரத்தில் ஆண் குழந்தை பிறந்தால் நாங்கள் சந்தோஷம்தான் படுவோம். ஆனாலும் ஆண் குழந்தைக்குப் பெரியதாக எந்த மேக்கப்பும் செய்ய முடியாது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று இந்திராஜாவிற்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தையும் அம்மாவும் நலமாக இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
பேரன் பிறந்த நேரத்தில் ரோபோ சங்கர் கதாநாயகனாக மாறி இருக்கும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.