1. Home
  2. தமிழ்நாடு

விமான நிலையத்தில் இண்டிகோ விமானம்- மினி வேன் மோதல்..!

1

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம், எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும். இந்த விமான நிலையத்தில் ஏப்.,18ல் நிறுத்தப்பட்டிருந்த இண்டிகோ விமானம் மீது மினி வேன் மோதியது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மினி வேன் டிரைவர் தூங்கியதால் விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து இண்டிகோ ஏர்லைன்ஸ் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
 

இது குறித்து இண்டிகோ ஏர்லைன்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெங்களூர் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இண்டிகோ விமானம் மற்றும் மினி வேன் மோதிய சம்பவம் குறித்து எங்களுக்குத் தெரியும். விசாரணைகள் நடந்து வருகின்றன. தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Trending News

Latest News

You May Like