விமானத்தில் பிறந்த குழந்தை… அதிரடி சலுகை வழங்கியுள்ள இண்டிகோ!

கர்ப்பிணி ஒருவர் விமானத்திலேயே குழந்தையை பிரசவித்த நிலையில், அந்த குழந்தைக்கு இண்டிகோ நிறுவனம் வாழ்நாள் இலவச டிக்கெட்டை அறிவித்திருக்கிறது.
கர்ப்பிணி ஒருவர் பெங்களூருவிலிருந்து இன்டிகோ 6 இ 122 விமானத்தில் டெல்லி செல்லும்போது திடீரென ஆண் குழந்தையை பிரசவித்தார். அப்பெண்ணுக்கு பிரசவ வலி எடுத்ததை அடுத்து விமானத்தில் இருந்த ஊழியர்கள் கவனமுடன் பார்த்துக் கொண்டனர்.
விமான ஊழியர்கள் குழந்தையை வைத்திருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இன்டிகோ குழு உறுப்பினர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அந்த குழந்தை தன் வாழ்நாள் முழுவதும் இண்டிகோ விமானத்தில் இலவசமாக பயணிக்கலாம். குழந்தையை நலமுடன் பெற்றெடுத்த அந்த பெண், இந்த அறிவிப்பால் மேலும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
newstm.in