1. Home
  2. தமிழ்நாடு

இண்டிகோவின் புதிய சேவை : இன்று முதல் சென்னை டூ யாழ்ப்பாணம் நேரடி விமான சேவை..!

1

இந்தியாவில் இருந்து இலங்கை செல்வோர், விமானத்தில் செல்வதாக இருந்தால் கொழும்பு தான் செல்ல வேண்டியிருந்தது. யாழ்ப்பாணம் செல்வதாக இருந்தாலும், கொழும்பு சென்று தான் செல்ல வேண்டிய நிலை முன் இருந்தது.

இதற்கு தீர்வாக, யாழ்ப்பாணத்துக்கு காலை வேளையில் 'அலையன்ஸ் ஏர்' நிறுவனம் விமான சேவையை துவங்கியது. இந்த விமான சேவை, திங்கள், செவ்வாய், வியாழன், சனி என வாரத்துக்கு நான்கு நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

தற்போது, தினமும் பிற்பகலில் சென்னை - யாழ்ப்பாணம் இடையே புதிய விமான சேவையை செப்டம்பர் 1ம் தேதி முதல் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் துவங்கியது. பயணக்கட்டணம் ரூ.7,604 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் பகல் 1.55 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 3.10 மணிக்கு யாழ்ப்பாணம் சென்றடையும். மாலை 3.55 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, மாலை 5.10 மணிக்கு மீண்டும் சென்னை வந்தடையும். 75 நிமிடத்தில் விமானம் சென்றடையும்.

Trending News

Latest News

You May Like