1. Home
  2. தமிழ்நாடு

இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு..!

Q

கொச்சியில் இருந்து நேற்று இரவு 11.10 மணிக்கு, அபுதாபி நோக்கி புறப்பட்ட இண்டிகோ விமானத்தில், நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை அறிந்த விமானி பத்திரமாக தரையிறக்க முயற்சி செய்தார். அவர் கொச்சி விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

நடுவழியில் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். இதையடுத்து பயணத்தை தொடர்வதற்கு பதிலாக, மீண்டும் கொச்சிக்கு திரும்ப முடிவெடுத்தார். சனிக்கிழமை அதிகாலை 1.44 மணிக்கு கொச்சி விமான நிலையத்துக்கு விமானம் மீண்டும் கொச்சிக்கு திரும்பியது.

பயணிகள் மற்றொரு விமானத்தில் அபுதாபிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பயணிகள் கடும் அவதி அடைந்தனர். சமீபகாலமாக விமானத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வருவது பயணியர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Trending News

Latest News

You May Like