இந்திய முன்னணி வீரர் ஓய்வு அறிவிப்பு..!

இந்திய முன்னணி வீரரான பியூஷ் சாவ்லா (வயது 36) அனைத்து வடிவிலான (டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐ.பி.எல்.) கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் கடைசியாக 2012-ம் ஆண்டு விளையாடினார். அதன்பின் இந்திய அணியில் இடம்பெறவில்லை. ஐ.பி.எல். தொடரில் மட்டுமெ விளையாடி வந்தார்.
இவர் 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார்.
இத்தகைய சூழலில் அவர் அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.