இந்தியாவின் அடுத்த மூவ்..! ரஷ்ய அதிபர் புடின் பிரதமர் இந்தியா வர அழைப்பு..!
இந்திய பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புடினும் இன்று போனில் பேசினர். உக்ரைன் மோதல் தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் குறித்து மோடியிடம் புடின் விளக்கினார். இதற்கு நன்றி தெரிவித்த பிரதமர், இந்த பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் எடுத்துக்கூறினார்.
இரு தரப்பு உறவு குறித்து கலந்துரையாடிய இருவரும், இதனை இன்னும் வலுப்படுத்துவது என அப்போது உறுதி பூண்டனர். அப்போது இந்தியா - ரஷ்யா இடையிலான உச்சி மாநாட்டில் பங்கேற்க டில்லி வருமாறு புடினுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது: "இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசித்தோம். எனது நண்பர் புதினுடன் நல்லதொரு விரிவான உரையாடலை நிகழ்த்தினேன். உக்ரைன் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்களைப் பகிர்ந்துகொண்டதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஆண்டு பிற்பகுதியில் அதிபர் புதினை இந்தியாவில் வரவேற்க ஆவலாக உள்ளேன்," என்று தெரிவித்துள்ளார்.
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் இந்தியாவைக் கடுமையாக விமர்சித்து வரும் டிரம்ப், இறக்குமதி வரியை 50 சதவீதமாக உயர்த்தியுள்ளார்.
இத்தகைய சூழலில், ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேசியிருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
.png)