1. Home
  2. தமிழ்நாடு

இந்தியாவின் பிரபல மசாலா பாக்கெட்களுக்கு திடீர் தடை..!!

1

மாறிவரும் உலக பழக்க வழக்கங்களில் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட உணவுகளை உண்பது குறைந்து வருகிறது. வீட்டிலேயே தயாரிக்கப்படும் உணவுகளிலும் பாக்கெட் மசாலாவின் பயன்பாடு அதிக அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் நாம் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையிலான ஆய்வு அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. ஹாங்காங்கின் உணவு பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை ஆணையமானது இந்திய மசாலா பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது.

அப்போது எம்டிஹெச் நிறுவனத்தின் மெட்ராஸ் கறி மசாலா சாம்பார் மசாலா, கறி மசாலா மற்றும் எவரெஸ்ட் ன் மீன் கறி மசாலா போன்ற மசாலா வகைகளில் புற்றுநோயை உண்டாக்கும் எத்திலின் ஆக்சைடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ள உணவு பொருட்களை தொடர்ந்து உட்கொள்ளும் போது நமது உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். எனவே இந்த மசாலா பொருட்களை மக்கள் பயன்படுத்த வேண்டாம் என்றும், கடைகளில் உள்ள பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எத்திலீன் ஆக்சைடை உட்கொள்வது நீடித்த காலத்துக்கான உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இந்தியர்கள் அதிகம் வசிக்கும் சிங்கப்பூரில், அவர்களது பயன்பாட்டுக்கான, இந்தியாவில் தயாரான மசாலா தயாரிப்பு ஒன்று தடை செய்யப்பட்டிருப்பதும், திரும்பப்பெற உத்தரவிடப்பட்டிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

Trending News

Latest News

You May Like