1. Home
  2. தமிழ்நாடு

இந்தியா அபார ஆட்டம்..! 191 ரன்களுக்கு சுருண்டது பாகிஸ்தான் அணி..!

1

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதுவரை 11 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் 3 வெற்றிகளுடன் நியூசிலாந்து அணி  புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. தென் ஆப்ரிக்க அணி (2 வெற்றி) இரண்டாவது இடத்திலும், இந்திய அணி(2 வெற்றி) 3 வது இடத்திலும், பாகிஸ்தான் அணி(2 வெற்றி) 4வது இடத்திலும் உள்ளன.  இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றி, ஒன்றில் தோல்வி என 5வது இடத்தில் உள்ளது. பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்ட ஆஸ்திரேலிய அணி முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்த 9வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், இன்று 12வது லீக் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் காரணமாக பாகிஸ்தான் அணி முதலாவதாக பேட்டிங் செய்தது.  பாகிஸ்தான் அணி இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணி 37 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக பாபர் அசாம் 50 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா, சிராஜ், குல்தீப், ஜடேஜா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

Trending News

Latest News

You May Like