1. Home
  2. தமிழ்நாடு

ஒரே மாதத்தில் கிரெடிட் கார்டு மூலம் ஒரு லட்சம் கோடி செலவழித்த இந்தியர்கள்!!

ஒரே மாதத்தில் கிரெடிட் கார்டு மூலம் ஒரு லட்சம் கோடி செலவழித்த இந்தியர்கள்!!


இந்தியாவில் கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்வது இதுவரை இல்லாத அளவாக கடந்த அக்டோபரில் ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2020 அக்டோபரில் கிரெடிட் கார்டில் இந்தியர்கள் செலவிட்ட தொகை 64,891 கோடி ரூபாய். இதற்கு முன் அதிகபட்சமாக கடந்த செப்டம்பரில் 80,477 கோடி ரூபாயை கிரெடிட் கார்டில் செலவிட்ட இந்தியர்கள், முந்தைய மாதத்தில், அதாவது ஆகஸ்டில் 77,981 கோடி ரூபாயை செலவழித்திருந்தனர்.

கொரோனாவுக்கு முந்தைய நிலையைவிட, கடந்த சில மாதங்களில் கிரெடிட் கார்டு செலவழிப்பு அதிகமாக இருப்பது ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரத்தில் தெரிய வந்திருக்கிறது.

ஒரே மாதத்தில் கிரெடிட் கார்டு மூலம் ஒரு லட்சம் கோடி செலவழித்த இந்தியர்கள்!!

2020 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் முறையே சுமார் 67,000 கோடி, 63,000 கோடி ரூபாயை கிரெடிட் கார்டில் இந்தியர்கள் செலவிட்டிருந்தனர். கிரெடிட் கார்டு செலவழிப்பு உச்சம் தொட்டதற்கேற்ப, அக்டோபரில் 13 லட்சத்துக்கு மேல் புதிய கிரெடிட் கார்டுகள் வாங்கப்பட்டிருக்கின்றன.

அது செப்டம்பரில் 10 லட்சமாக இருந்த நிலையில், நாட்டில் மொத்த கிரெடிட் கார்டுகள் எண்ணிக்கை 6 கோடியே 63 லட்சமாகி இருக்கிறது.

கிரெடிட் கார்டு செலவழிப்பு மட்டுமின்றி கடந்த செப்டம்பர் தொடங்கி 3 மாதங்களில் தனிநபர் கடனும், ரொக்கச் செலவழிப்பும் கணிசமாக உயர்ந்ததாக முன்னணி தனியார் வங்கிகளான எச்.டி.எஃப்.சி. ஆக்சிஸ் மற்றும் ஐசிஐசிஐ தரப்பிலும் தெரிவிக்கப்படுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like