1. Home
  2. தமிழ்நாடு

அமெரிக்காவில் 350 கார்களில் பேரணி நடத்திய இந்தியர்கள்..!

1

உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகரில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு உள்ளது.  அதற்கான கும்பாபிஷேக விழா வருகிற 22-ம் தேதி நடைபெற உள்ளது.  ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் இன்றைக்குள் நிறைவடைந்து விடும்.  அதன் பின் நாளை 16-ம் தேதி  சிலை பிரதிஷ்டை பூஜை தொடங்கி, தொடர்ந்து 22-ம் தேதி வரை நடைபெறும்.

ராமர் கோவில் வளாகம் பாரம்பரிய நகர முறைப்படி கட்டப்பட்டு உள்ளது.  அது கிழக்கு மேற்கு திசையில் 380 அடி நீளமும், 250 அடி அகலமும் மற்றும் 161 அடி உயரமும் கொண்டது.  கோவிலின் ஒவ்வொரு தரைப் பகுதியும் 20 அடி உயரம் கொண்டது.  மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 நுழைவாயில்களையும் கோவில் கொண்டுள்ளது.

இதே போன்று தங்க முலாம் பூசப்பட்ட கதவுகளும் நிறுவப்படுகின்றன.  இந்த கதவு 12 அடி உயரமும், 8 அடி அகலமும் உடையது.  கோவிலில் மொத்தம் 46 கதவுகள் நிறுவப்படும்.  அவற்றில் 42 கதவுகளில் 100 கிலோ எடை கொண்ட தங்க முலாம் பூசப்படும். இந்த விழாவில் பங்கேற்க வரும்படி முக்கிய பிரபலங்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் எடிசன் பகுதியில் உள்ள இந்தியர்கள், கார் பேரணி ஒன்றை நடத்தினர்.  இதற்காக 350-க்கும் மேற்பட்ட கார்கள் வரிசையாக அணிவகுத்தன.  

அந்த கார்களில் இந்து சமயம் சார்ந்த கொடிகள் கட்டப்பட்டு இருந்தன.  பேரணி தொடங்குவதற்கு முன்பு, கடவுள் ராமர் ஆராதனை பாடல்களும் பாடப்பட்டன.  இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். 

Trending News

Latest News

You May Like