1. Home
  2. தமிழ்நாடு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை..!

Q

நியூ ஜெர்சி மாகாணத்தில் வசித்து வந்த பிரணவ் படேல்,33, என்ற இந்திய வம்சாவளி, கால் சென்டர்கள் மூலம் முதியோர்களை குறி வைத்து மிரட்டி, பணம் மற்றும் நகைகளை பறித்து வந்துள்ளார்.
கருவூலத்துறை அல்லது அரசின் பிற ஏஜன்சிகளைச் சேர்ந்த அதிகாரிகள் என்று முதியோர்களை செல்போனில் தொடர்பு கொண்டு, 'உங்கள் மீது குற்ற நடவடிக்கைக்காக கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கைது செய்யாமல் இருக்க உங்களிடம் உள்ள பணம் மற்றும் நகைகளை எங்களிடம் விசாரணைக்கு கொடுக்க வேண்டும்,' என்று கூறி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அந்த வகையில் ஒரு வீட்டில் நகை உள்ள பெட்டியை பெறுவதற்காக சென்ற அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், பண மோசடி மற்றும் பணத்தை சட்டவிரோதமாக கைமாற்றுதல் போன்ற குற்றங்களுக்காக பிரணவ் படேல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், பிரணவ் படேலுக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Trending News

Latest News

You May Like