Starbucks நிறுவனத்தின் CEO பொறுப்பிலிருந்து இந்திய வம்சாவளி லக்ஷ்மன் நரசிம்மன் நீக்கம்..!
ஸ்டார்பக்ஸ் நிறுவனம் உலகளவில் புகழ்பெற்ற காபி நிறுவனம். உலகம் முழுவதும் சுமார் 80 நாடுகளில் 32000க்கும் மேற்பட்ட ஸ்டார்பக்ஸ் ஸ்டோர்கள் இயங்கி வருகின்றன. மேலும், பிரீமியம் ஸ்டோர்களையும் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறது.
கூகுள், மைக்ரோசாப்ட், அடோப், ஐபிஎம், பெப்ஸி போன்ற பல்வேறு அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் தலைமை பதவி வகித்து வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது இந்திய வம்சாவளியை சேர்ந்த லக்ஷ்மன் நரசிம்மன் ஸ்டார்பக்ஸ் தலைமை பொறுப்பு வகுத்து வந்த நிலையில் CEO பொறுப்பிலிருந்து நீக்கம்.
இந்தியாவில் பிறந்த லஷ்மன், மார்ச் 2023ல் ஸ்டார்பக்ஸ் CEO ஆக பதவியேற்றார். அமெரிக்காவிலும் சீனாவிலும் ஸ்டார்பக்ஸ் விற்பனை நலிவடைந்த நிலையில் முதலீட்டாளர்கள் அழுத்தம் கொடுத்ததால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஸ்டார்பக்ஸ் CEO ஆக இருந்த லஷ்மன் நரசிம்மனுக்கு பதிலாக Chipotle நிறுவன CEO பிரையன் நிக்கோலை அப்பதவியில் நியமித்துள்ளதாக ஸ்டார்பக்ஸ் செவ்வாய்க்கிழமையன்று அறிவித்துள்ளது.