9,111 சிறப்பு ரயில்கள் – இந்திய ரயில்வே!
கோடை விடுமுறை காலம் தொடங்கிவிட்டதால் சுற்றுலா மற்றும் சொந்த ஊர்களுக்கு ரயில்களில்சென்று வருவோர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். இத்தகைய சூழலில் ரயில் பயணிகளின் துயரங்கள் சொல்லிமாளாது. எனவே, அதிகரிக்கும் கூட்ட நெரிசல் மற்றும் மக்களின் கோடைகால பயணத் தேவைகளை பூர்த்தி செய்யும்வகையில் இந்திய ரயில்வே நாடு முழுவதும் 9,111 ரயில்களை இயக்க உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்தியா முழுவதும் உள்ள முக்கிய இடங்களை இணைக்க கூடுதல் ரயில்களை இயக்கதிட்டமிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் கோடை சீசனில் இயக்கப்பட்ட ரயில்களின் எண்ணிக்கையில்குறிப்பிடத்தக்க உயர்வு ஆகும். இதன் மூலம் பயணிகளுக்கு சுமூகமான, வசதியான பயணத்தை வழங்க முடியும் எனஇந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
இதேபோல் ரயில் நிலையங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வதற்கும், முக்கிய ரயில்நிலையங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை உறுதி செய்வதற்கும் இந்தியா முழுவதும் உள்ளஅனைத்து மண்டல ரயில்வே நிர்வாகங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோடை காலத்தில் கூடுதல் ரயில்கள் இயக்கம்
ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை சீராக கட்டுப்படுத்தவும், நெரிசல் போன்ற சூழ்நிலைகளைத் தவிர்க்கவும்நடை மேம்பாலங்களில் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎஃப்) நிறுத்தப்பட்டுள்ளனர். கூடுதல் ரயில்களுக்கானடிக்கெட்டுகளை ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர்கள் அல்லது ஐஆர்சிடிசி வலைதளம்/செயலி ஆகியவற்றில் முன்பதிவுசெய்யலாம் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது