1. Home
  2. தமிழ்நாடு

இன்று முதல் 182 ரயில்களின் நேரத்தை மாற்ற இந்திய ரயில்வே நிர்வாகம் முடிவு..!

1

 திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும்படியாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட 8 பெட்டிகளைக் கொண்ட வந்தே பாரத் ரயில் திட்டம் கடந்த செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கப்பட்டது. திருநெல்வேலியில் இருந்து அதிகாலை 6 மணிக்குப் புறப்பட்டு சென்னை எழும்பூருக்கு பிற்பகல் 1.50 மணிக்குச் சென்றடையும். இந்த ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம் உள்ளிட்ட 6 ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்.

அதேபோல் சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலிக்கு இரவு 10.40 மணிக்குச் வந்து சேரும். மணிக்கு 110 கி.மீ வேகத்தில் செல்லக் கூடிய வந்தே பாரத் ரயில் திருநெல்வேலி சென்னை இடையிலான 653 கி.மீ தூரத்தை 7.50 மணி நேரத்தில் சென்றடையும்.

இந்நிலையில் வந்தே பாரத் ரயில், பிற ரயில்களின் வருகைக்காக நின்று செல்லாமல் இருக்க வைகை, கோவை விரைவு ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Train

தற்போது வெளியிடப்பட்டுள்ள அட்டவணையில் சென்னை - கோவை, சென்னை- நெல்லை வந்தே பாரத் ரயில் உள்பட 11 விரைவு ரயில்கள் புதிதாக இடம் பெற்றுள்ளன. திருச்செந்தூர் விரைவு ரயில், தேஜஸ் விரைவு ரயில் உள்ளிட்ட 199 ரயில்கள் கூடுதல் நிறுத்தங்களில் தற்காலிகமாக நின்று செல்கிறது. மேலும், புனே - கன்னியாகுமரி உள்ளிட்ட 34 ரயில்கள் வேகமாக இயக்கப்பட உள்ளன.

மதுரையில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு வந்த வைகை விரைவு ரயில், இன்று முதல் பழைய நேரத்திற்கு பதிலாக காலை 6.40 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு வரும் வைகை விரைவு ரயில் இரவு 9.15 மணிக்கு பதிலாக இரவு 9.30 மணிக்கு 15 நிமிடங்கள் தாமதமாக வந்தடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

அதேபோல் மதுரை - சென்னை பாண்டியன் விரைவு ரயில் ரயில் இன்று (அக். 1) முதல் இரவு 9.35 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 9.20 மணிக்கும் புறப்பட்டு செல்லும் என தெற்கு ரயில்வே வெளியிட்டு உள்ள அட்டவணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

சென்னை - செங்கோட்டை பொதிகை விரைவு ரயில் மதுரையில் இருந்து அதிகாலை 4.45 மணிக்கு பதிலாக அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட்டு செல்லும் என கூறப்பட்டு உள்ளது. அதேபோல் சென்னை - திருநெல்வேலி இடையே கடந்த செப்டம்பர் 24-ம் தேதி வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த ரயில் மதுரைக்கு காலை 7.50 மணிக்கு வருகிறது. இந்த நேரத்தை சரிசெய்யும் வகையில் மதுரை - சென்னை எழும்பூர் வைகை விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 


 


 

Trending News

Latest News

You May Like