ஆடவர் ஹாக்கியின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி..!
நேற்றைய தினம், ஆடவர் ஹாக்கி போட்டியின் அரையிறுதிப் போட்டி நடந்தது. அதில் இந்தியாவும் ஜெர்மனியும் விளையாடின. இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பாக இருந்த இந்தப் போட்டியில், இந்திய அணி தோல்வி அடைந்தது. பரபரப்பாக நடந்த போட்டியில் இரு அணிகளும் இறுதி வரை கோல்களை அடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தின.
2 கோல்களுடன் ஆட்டம் சமனில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதியில் ஜெர்மனி அணி கூடுதலாக ஒரு கோல் அடித்து வெற்றி பெற்றது. இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு ஜெர்மணி முன்னேறியது. இந்தநிலையில், நாளை நடைபெறும் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியா, ஸ்பெயினை எதிர்கொள்கிறது.