1. Home
  2. தமிழ்நாடு

இந்தியன் தாத்தா இஸ் பேக் ..! ‘இந்தியன் 2’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

1

இந்தியன் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் சங்கர் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கியுள்ளார். 

இந்தப் படமும் இந்தியன் படத்தின் முதல் பாகத்தை போல் ஊழல், அரசியல் பின்னணியில் உருவாகியுள்ளது. மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகியுள்ள இந்த படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து சித்தார்த், எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

கடந்த சில வருடங்களாகவே இந்த படத்தின் படப்பிடிப்பு முக தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக படப்பிடிக்கும் முழுவதும் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து இந்த படம் தேர்தலின் காரணமாக2024 மே மாதம் 24 ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் கசிந்தது. 

அதன்படி இந்த படமானது 2024 ஜூன் மாதத்தில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் சார்பில் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனேகமாக இந்த படம் ஜூன் 13ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. எனவே படத்தின் டீசர், ட்ரெய்லர் போன்றவை இனிவரும் நாட்களில் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1

Trending News

Latest News

You May Like